Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அந்த தகவலில் உண்மையில்லை, இபிஎப். சந்தாதாரர்கள் விளக்கம்
தற்போதைய செய்திகள்

அந்த தகவலில் உண்மையில்லை, இபிஎப். சந்தாதாரர்கள் விளக்கம்

Share:

தொழிலாளர் சேமநிதி வாரியமான .இபிஎப்.பின் சந்தாதாரர் ஒருவர் இறந்து விட்டால் அவரின் வாரிசுதாரருக்கு எந்தவொரு கேள்விக்கும் இடமின்றி உடனடி உதவித் தொகையாக 5 ஆயிரம் வெள்ளி ரொக்கம் வழங்கப்படும் என்ற தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

எனினும் சம்பந்தப்பட்ட இபிஎப். சந்தாதாரர், குறைந்த பட்சம் இறப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட வாரிசுதாரரின் பெயரை இபிஎப் வாரியத்தில் தனது கணக்கில் பதிவு செய்து இருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்து இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட வாரிசுதாரருக்கு 5 ஆயிரம் வெள்ளி உடனடி ரொக்கம் வழங்கப்படும் என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எனினும் அந்த தகவல் உண்மை அல்ல. பொய்யானதாகும் என்று இபிஎப். வாரியம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

Related News