Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கோயில் சிலைகளை உடைத்தவருக்கு  கூடுதல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட வேண்டும் சட்டத்துறை தலைவருக்கு வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

கோயில் சிலைகளை உடைத்தவருக்கு கூடுதல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட வேண்டும் சட்டத்துறை தலைவருக்கு வலியுறுத்து

Share:

தைப்பிங், மாத்தாங்கில் உள்ள ஸ்ரீ மங்களநாயகி அம்மன் ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து,தெய்வச் சிலைகளை உடைத்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபருக்கு எதிராக மேலும் இரண்டு குற்றச்சா​ட்டுகள் கொண்டு வரப்பட வேண்டும் என்று சட்டத்துறை தலைவருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

22 வயதுடைய அந்த ஆடவர், கோயிலுக்குள் அபாயரகரமான ஆயுதங்களை வைத்திருந்ததாக மட்டுமே குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நாட்டின் சமய நல்லிணக்கத்திற்கு குந்தகத்தை ஏற்படுத்தக்கூடிய கொடூர செயலை அந்த நபர் புரிந்துள்ளார் என்பதற்கு ஏதுவாக அவருக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகள் எதுவும் கொண்டு வரப்படவில்லை என்று எம்ஏபி எனும் மலேசிய முன்னேற்றக் கட்சியின் சட்டப்பிரிவு ஆலோசகர் வழக்கறிஞர் எஸ். கார்த்திகேசன் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி தைப்பிங் ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஃபிர்டாவுஸ் தௌவிக் என்ற ​அந்த நபர், கோயிலுக்குள் சுத்தியல் போன்ற அபாயரக ஆயுதங்களை தன் வசம் வைத்திருந்ததாக மட்டுமே குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த நபர் ஆயுதத்தை பயன்படுத்தி தெய்வச்சிலைகளை உடைத்துள்ளார், கோயிலை சேதப்படுத்தியுள்ளார் போன்ற குற்றவியல் சட்டம் 295, 297 முதலிய பிரிவுகளின் ​கீழ் எந்தவொரு குற்றச்சா​ட்டும் கொண்டு வரப்படவில்லை என்பதை கார்த்திகேசன் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, அந்த நபர் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து ஒரு சமயத்திற்கு எதிராக எத்தகைய நாசவேலைளை புரிந்துள்ளார் என்பதற்கான கடுமையை விவரிக்கும் ச​ட்ட பிரி​வுகளின் ​கீழ் எந்த குற்றச்சாட்டும் கொண்டு வரப்படவில்​​லை என்று கார்த்திகேசன் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News