அடுத்த ஆண்டு தொடங்கி பொதுப் பல்கலைக்கழகங்களில் நுழைவுக் கட்டணமாக அதிகபட்சம் ஆயிரத்து 500 வெள்ளி மட்டுமே விதிக்கப்பட உள்ளதாகப் பிரதமர் அன்வார் அறிவித்தார்.
தகுதி பெறும் உயர்கல்வி மாணவர்களுக்கு பிடிபிடிஎன் உயர்க்கல்விக் கடன் நிதியில் இருந்து முன்பணமாக ஆயிரத்து 500 வெள்ளி மட்டுமே கொடுக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அவர் விளக்கமளித்தார்.
பல்கலைக்கழகக் கட்டணத்தைச் செலுத்த முடியாத தற்போதைய மாணவர்கள் ஒவ்வொரு கல்வித் தவணைக்கும் பாடங்களின் பதிவுக்கும் அதன் பிறகு வகுப்புக்கும் தடை செய்யப்பட மாட்டார்கள் என அவர் மேலும் சொன்னார்.








