May 24, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

Share:

புது டெல்லி , ஆகஸ்ட் 21-

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் அட்டூழியங்களை நிறுத்துவது குறித்து அனைத்துலக அளவில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது குறித்து பிரதமர் Datuk Seri Anwar Ibrahim மீண்டும் விமர்சித்து கடிந்து பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி, பாலஸ்தீனத்தில் நடந்து வரும் இனப்படுகொலை முடிவுக்கு வர வேண்டும் என்பது குறித்து தெளிவான செய்தியை வெளியிடமாறு அவர் பரிந்துரைத்தார்.

பாலஸ்தீனத்திற்கு உலகளவில் பல நாடுகள் ஆதரவளிக்க முன் வர வேண்டும் என்றும் பிரதமர் செவ்வாயன்று புது தில்லியில் நடந்த சிந்தனையாளர்களின் கூட்டத்தில் விரிவுரை ஆற்றிய பின்னர், கேள்வி-பதில் அங்கத்தில் கூறினார்.

Related News