Dec 5, 2025
Thisaigal NewsYouTube
சர்ச்சைக்குரிய 'காதல் ஊக்குவிப்பு நிகழ்ச்சியில்' நிர்வாண அம்சத்தைப் போலீசார் உறுதிப்படுத்தினர்
தற்போதைய செய்திகள்

சர்ச்சைக்குரிய 'காதல் ஊக்குவிப்பு நிகழ்ச்சியில்' நிர்வாண அம்சத்தைப் போலீசார் உறுதிப்படுத்தினர்

Share:

ஷா ஆலாம், ஜூலை.16-

கடந்த ஆண்டு ஷா ஆலாமில் நடைபெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய இஹாத்தி திருமண ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் நிர்வாணம் சம்பந்தப்பட்ட செயல்பாடு இடம் பெற்றிருப்பதைப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளில் “குயின்ஸ் நைட்” என்ற பெயரில் ஆடை களைந்து நிர்வாண நடனங்கள் இடம் பெற்றதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹுசேன் ஓமார் கான் கூறினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இரண்டு பேக்கேஜ் திட்டங்கள் வழங்கப்பட்டன. சுமார் 6 ஆயிரம் ரிங்கிட் கட்டணத்தில் பேக்கேஜ் A, மற்றும் சுமார் 9 ஆயிரம் ரிங்கிட் கட்டணத்தில் பேக்கேஜ் B என இரு பிரிவுகளாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் “குயின்ஸ் நைட்” நிகழ்ச்சியும் அடங்கும் என்று ஷா ஆலாமில் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் டத்தோ ஶ்ரீ ஹுசேன் ஓமார் இதனைக் கூறினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நீச்சல் உடையான பிகினி ஆடையில் வலம் வந்த ஒரு பெண் பேச்சாளர், நிகழ்வு முடியும் தருவாயில் உச்சக் கட்டமாக பங்கேற்பாளர்களுடன் இணைந்து ஆடை களைந்து நிர்வாணமாக நடனமாடியுள்ளார். இதனை நிகழ்வில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் ஒரு முகநூல் பயனர் கூறியுள்ளார் என்று ஹுசேன் ஓமார் குறிப்பிட்டார்.

பங்கேற்பாளர்கள் தங்களின் ஆடை களைந்து சுதந்திரமாக நடனமாடுவதற்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மர்மமான பானம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வரும் வேளையில், இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள், போலீசாரின் விசாரணைக்கு உதவ முன் வர வேண்டும் என்று ஹுசேன் ஓமார் கேட்டுக் கொண்டார்.

இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அடங்குவர். இதில் திருமணமான தம்பதிகள் அடங்குவர் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

Related News