Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஸ்கேம் மோசடிகளில் பாதிக்கப்படுகின்றவர்களில் மலேசியா முன்னணி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஸ்கேம் மோசடிகளில் பாதிக்கப்படுகின்றவர்களில் மலேசியா முன்னணி

கோலாலம்பூர், நவ. 18-


ஆன்லைன் ஸ்கேம் மோசடி குற்றச் செயல்களில் மீண்டும் மீண்டும் தங்கள் பணத்தை பறிகொடுத்து ஏமாறும் நபர்களின் எண்ணிக்கையை பதிவு செய்து வரும் ஆசிய நாடுகளில் மலேசியா முன்னணி வகிக்கிறது.

ஸ்கேம் மோசடி பேர்வழிகளிடம் ஒரே நபர், பல முறை ஏமாந்துள்ளார் என்று மலேசியாவின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன என்று குளோபல் ஸ்கேம் தடுப்பு அமைப்பின் ஆய்வுகள் காட்டுகின்றன.

மலேசியாவிற்கு அடுத்து ஹாங்காங் மற்றும் தாய்லாந்து முன்னணி வகிக்கிறது என்று அந்த ஆய்வில் தெரிவந்துள்ளதாக செல்கோம்டிஜி தலைவர் பிலிப் லிங் தெரிவித்தார்.

இதில் இரண்டு விஷயங்கள் கவலை அளிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார்.

முதலாவது, ஒரே நபர் மீண்டும்,மீண்டும் மோசடிகளால் பாதிக்கப்படுகிறார். மற்றொன்று, சம்பந்தப்பட்ட மோசடி பேர்வழி தங்களை ஏமாற்றுகிறார் என்று பகுத்தறியும் அறிவாற்றல் மக்களிடயே குறைவாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று பிலிப் லிங் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →