Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஹோலண்ட் ரோட்டில் உள்ள நிலப் பகுதிகளை மாற்றிக் கொள்ள சிங்கப்பூர் – ஜோகூர் இடைக்கால சுல்தான் இணக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஹோலண்ட் ரோட்டில் உள்ள நிலப் பகுதிகளை மாற்றிக் கொள்ள சிங்கப்பூர் – ஜோகூர் இடைக்கால சுல்தான் இணக்கம்

சிங்கப்பூர், ஜூன்.10-

சிங்கப்பூர்ப் பூமலையை ஒட்டி ஹோலண்ட் சாலையில் அமைந்துள்ள, ஜோகூர் அரச குடும்பத்துக்குச் சொந்தமான 13 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலப் பகுதியை சிங்கப்பூர் அரசாங்கம் கையகப்படுத்தவிருக்கிறது.

சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும், ஜோகூர் இடைக்கால சுல்தான் துவாங்கு மாஹ்கோத்தா இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமிற்கும்
இடையிலான நிலப் பரிமாற்ற ஒப்பந்தம் இதைச் சாத்தியமாக்கியுள்ளது.

அந்த நிலப் பகுதிக்கு மாற்றாக அதற்கு அருகிலுள்ள 8.5 ஹெக்டர் சிங்கப்பூர் அரசாங்க நிலப்பகுதி, ஜோகூர் ஆட்சியாளருக்கு வழங்கப்படும்.

சிங்கப்பூர் கட்டுப்பாட்டு ஆணையங்களின் ஒப்புதலுக்குப் பிறகு அந்த நிலப்பரப்பில் ஜோகூர் ஆட்சியாளர் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள இயலும்.

நிலப் பரிமாற்றம் இந்த ஆண்டுப் பிற்பகுதியில் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஒப்பந்தம் குறித்த தகவலைச் சிங்கப்பூர் நில ஆணையமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டன.

சிங்கப்பூர், Tyersall பார்க்கில் உள்ள நிலப்பகுதி 1800 ஆம் ஆண்டு முதல் ஜோகூர் அரச குடும்பத்திற்குச் சொந்தமானதாக இருந்து வருகிறது. ஜோகூர் சுல்தானின் வரலாற்றுபூர்வமான சிங்கப்பூர் இல்லமாக அது விளங்குகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு