கோலாலம்பூர், அக்டோபர்.16-
நாடு முழுவதும் உள்ள இந்துக்கள், தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியிருக்கும் வேளையில் இந்துக்களின் தீபாவளி ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கும் அவர்களைச் சந்திப்பதற்கும் இன்று மாலை 4 மணியளவில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவிற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வருகை புரிந்தார்.
பிரதமரின் வருகையைத் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறைத் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் எதிர்கொண்டு வரவேற்றார். லிட்டில் இந்தியாவில் தீபாவளியையொட்டி கடைகளை அமைத்து இருக்கும் வணிகர்களையும், கடை உரிமையாளர்களையும், பொதுமக்களையும் பிரதமர் நேரில் சந்தித்து தீபாவளி ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
பிரிக்பீல்ட்ஸ் வணிகச் சமூகத்தைச் சந்தித்த அதே வேளையில், மெட்ராஸ் பேக்கரி கடையில் தேநீர், பலகாரங்களை அருந்தி விட்டு, கடைசி நேர ஷாப்பிங்கிற்கு திரண்ட மக்களுடன் உற்காசம் மிகுந்த சூழலில் பிரதமர் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.