நேற்று இரவு 8.30 மணியளவில் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த காரின் மீது மரமொன்று சாய்ந்து விழுந்ததில் அந்த காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சுங்கை பெட்டாணி சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையின் அருகில் நடந்த இச்சம்பவத்தில், 52 வயது மதிக்கத்தக்க எஸ் கார்த்திகேசு எந்தவொரு முதல் உதவி சிகிச்சையும் பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக அமான் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு செயல் நடவடிக்கை குழுவின் கொமண்டர் அஸாரி அப்துல்லா தெரிவித்தார்.
கனத்த மழை பெய்ந்து ஓய்ந்த நிலையில், இருள் சூழ்ந்த அந்தச் சாலையில் மரம் விழுவது அறியாமல் சம்பந்தப்பட்ட நபர் காரைச் செலுத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.








