Jan 24, 2026
Thisaigal NewsYouTube
பிரதமருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

Share:

மலேசியாவிற்கு வருகைப் புரிந்துள்ள பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை புத்ரா ஜெயாவில் உள்ள அவரின் அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.

வேஷ்டி, வெள்ளை நிற தி-செட் அணிந்து மிக எளிமையாக காணப்பட்ட 72 வயதுடைய ரஜினிகாந்தை பிரதமர் அன்வார் இரு கரம் கூப்பி வரவேற்றார்.

அனைத்துலக திரைப்பட உலகில் மிக பரீச்சயமான இந்திய திரைப்பட நச்சத்திரத்தை வரவேற்பதில் தாம் பெருமிதம் கொள்வதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

தம்முடைய போரட்டக் காலத்தில் குறிப்பாக மக்கள் துயருற்று இருந்த போது தமக்கு ஆதரவு நல்கிய ரஜினிகாந்திற்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த குறுகிய நேர சந்திப்பில் நஜினிகாந்துடன் பலதரப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்ட போதிலும் தமது போராட்டத்தின் சில முக்கிய நிகழ்வுகளை ரஜினிகாந்தின் எதிர்கால நடிப்பிலான திரைப்படங்களில் சேர்த்துக் கொள்வதுக் குறித்தும் கலந்து உரையாடியதாக அன்வார் தெரிவித்தார்.

Related News