Dec 2, 2025
Thisaigal NewsYouTube
உள்ளூர் ரேப் பாடகர் Namewee: போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

உள்ளூர் ரேப் பாடகர் Namewee: போலீஸ் தேடுகிறது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.05-

கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தைவானைச் சேர்ந்த பிரபல பெண் கலைஞர் ஒருவர் இறந்து கிடந்தது தொடர்பில் உள்ளுர் ரேப் பாடகரான Wee Meng Chee என்ற Namewee- என்பவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த அக்டேபார் 22 ஆம் தேதி பிற்பகல் 1.40 மணியளவில் கோலாலம்பூர், Jalan Conlay-யில் உள்ள Banyan Tree ஹோட்டல் அறையில் 31 வயது தைவான் பெண் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தப் பெண்ணின் இறப்பு, முதலில் திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டது. எனினும் போலீசார் மேற்கொண்ட புலனாய்வில் அது கொலை என்று முடிவு செய்யப்பட்டது.

அந்தப் பெண்ணை ஆகக் கடைசியாகச் சென்று பார்த்தவர் மலேசியாவைச் சேர்ந்த அந்த ரேப் பாடகர் என்பது தெரிய வந்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

Related News