Sep 27, 2026
Thisaigal NewsYouTube
புதிய SPRM தலைவரை மாமன்னரே தேர்வு செய்வார்
தற்போதைய செய்திகள்

புதிய SPRM தலைவரை மாமன்னரே தேர்வு செய்வார்

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மின் அடுத்த தலைமை ஆணையரைத் தாங்களே தேர்ந்தெடுக்கப்போவதாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் இந்த பதவி மிக முக்கியமானது என்பதால், தகுதியான ஒருவரைத் தாம் தேர்வு செய்யப்போவதாக அரச ஊடக அலுவலகத்திடம் இன்று மாமன்னர் தெரிவித்துள்ளார்.

SPRM- மின் தற்போதைய தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கியின் பங்குகள் தொடர்பான சர்ச்சை அனைத்துலக அளவில் விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், அவரது பதவிக்காலம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டான்ஸ்ரீ அஸாம் பாக்கிக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாமன்னரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related News