Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தீபாவளியை முன்னிட்டு விலை கட்டுப்படுத்தப் பட்டியலில் 9 பொருட்கள்
தற்போதைய செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு விலை கட்டுப்படுத்தப் பட்டியலில் 9 பொருட்கள்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.13-

வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் விலை கட்டுப்படுத்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் ஒன்பது பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டிறைச்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், சிவப்பு நிற சிறிய வெங்காயம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம், ஆஸ்திரேலியப் பருப்பு, தேங்காய் ஆகியவை விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் அடங்கும்.

வரும் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை, இப்பொருட்கள் விலை கட்டுப்படுத்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் என்று உள்நாட்டு வாணிபம், வாழ்க்கை செலவின அமைச்சர் அர்மிஸான் முகமட் அலி தெரிவித்தார்.

Related News