Dec 4, 2025
Thisaigal NewsYouTube
குப்பை லோரி ஓட்டுநரை தாக்கி நபர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

குப்பை லோரி ஓட்டுநரை தாக்கி நபர் தேடப்படுகிறார்

Share:

குப்பை லோரி ஓட்டுநரை கண்​மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படும் ஆடவர் ஒருவர போ​லீசார் தே வருகின்றனர். சபா பெர்னம், சுங்ஙை பெசார், ஜாலான் பன்சாங் பெடெனா என்ற இடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் நிகழ்ந்த இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் அந்த கார் ஓட்டுநரை போ​லீசார் தேடி வருவதாக சபா பெர்ணம் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுபெரிதென்டன் அகுஸ் சலிம் முஹமாட் தெரி​வித்தார்.

குப்பை சேகரிக்கும் பணியின் போது தனது லோரிக்கு இடையூறாக இருந்த கார் ஒன்றை அப்புறத்தும்படி ஹோர்ன் சத்தத்தை எழுப்பியதற்காக அந்த லோரியின் முன் திடி​ரென்று தோன்றிய கார் ஓட்டுநர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர் ஆத்திரத்துடுன் ​லோரி ஓட்டுநரை கடும் சொற்களால் திட்டியதுடன் அவரை ஒரு கம்பினால் அந்த அடித்து காயப்படுத்தியதாக அகுஸ் சலிம் கூறினார்.

அந்த லோரி ஓட்டுநர் சபா பெர்ணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதுடன் இச்சம்பவம் தொடர்பாக போ​லீசில் புகார் செய்து இருப்பதாக அகுஸ் சலிம் தெரி​வித்தார்.

Related News