சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, பொருட்கள் ஏற்றப்பட்டுக்கொண்டு இருந்தகொண்தெனா டிரைய்லரில், கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மோதி விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் கிள்ளான், தாமான் செந்தோசா, ஜாலான் டத்தோ யூசோப் ஷாபுடின் னில் நிகழ்ந்தது. லோரியின் தலைப்பகுதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கொண்தெனா வின் அடிப்பகுதியில் சிக்கிய புரோடுவா கன்சில் காரின் ஓட்டநரான அந்த ஆடவர், தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மாண்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப்படை தலைவர் சுல்பிகர் ஜாஃபர் தெரிவித்தார்.
இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அந்த நபரின் உடலை மீட்பதற்கு மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


