Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பெட்டாலிங் ஜெயாவில் இன்னிசை கேளிக்கை மையங்களின் செயல்பாட்டு நேரம் அதிகாலை 3 மணி நேரம் வரை நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

பெட்டாலிங் ஜெயாவில் இன்னிசை கேளிக்கை மையங்களின் செயல்பாட்டு நேரம் அதிகாலை 3 மணி நேரம் வரை நீட்டிப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.06-

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள இன்னிசை கேளிக்கை மையங்களின் செயல்பாட்டு நேரத்தை அதிகாலை 3 மணி வரை நீட்டிக்க மாநகர் மன்றம் முடிவு செய்துள்ளது.

பெட்டாலிங் ஜெயா மாநகரில் லைசென்ஸ் கொள்கைகளைப் புதுப்பிப்பதற்கான பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்னிசை கேளிக்கை மையங்களின் செயல்பாட்டு நேரத்தை அதிகாலை 3 மணி வரை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

மாநகர் மன்ற கவுன்சிலர்கள், துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் இத்தொழில்துறையைச் சார்ந்தவர்களுடன் , குறிப்பாக விருந்தோம்பல், உணவு மற்றும் பானத் துறைகளைச் சேர்ந்தவர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்புகளைத் தொடர்ந்து, இந்த முடிவு விரைவில் முறைப்படுத்தப்பட உள்ளது.

முறையான லைசென்ஸ் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதை உறுதிச் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் முகமட் ஸாரி சமிங்கோன் தெரிவித்துள்ளார்.

Related News