Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வங்கிகள் கவனக்குறைவாக இருந்தால் பொது மக்கள் இழப்பீடு கோரலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வங்கிகள் கவனக்குறைவாக இருந்தால் பொது மக்கள் இழப்பீடு கோரலாம்

கோலாலம்பூர், டிச.3-


வங்கிகள் கவனக் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டால் மோசடியால் பாதிக்கப்பட்ட வங்கி கணக்கு உரிமையாளர்கள் இழப்பீடு கோர முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 413வது பிரிவின் கீழ் வங்கிகள்
இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த சட்டப் பிரிவின் கீழ் 178,407 வெள்ளி திரும்பப் பெறப்பட்டு இருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஒரு தவறு வங்கினால் நிகழுமானால் அதன் மூலம் வாடிக்கையாளர்கள் இழப்பீடு கோருவதற்கான வழிகள் உள்ளன என்பதே இதன் பொருளாகும் என்று நிதி அமைச்சருமான் டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
எனினும், இங்கிலாந்து சட்டத் திட்டத்துடன் தொடர்பு படுத்தப்பட்டதைப் போல் வங்கித் தரப்பின் கவனக் குறைவு அல்லது அவர்கள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாதது கண்டறியப்படால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும். இந்த கோட்பாடு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று மக்களவையில் பாடாங் தெராப் உறுப்பினர் நுருள் அமின் ஹமிட் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை நிகழ்ந்த இணைய
மோசடிக் குற்றங்களில் 122.2 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக
டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →