Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவினாலும், எண்ணெய், எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு இல்லை – அன்வார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவினாலும், எண்ணெய், எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு இல்லை – அன்வார் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், மார்ச்.06-

மலேசியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகமானது இயல்பு நிலையில் இருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மத்தியக் கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலை அரசாங்கம் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மலேசியா விழிப்புடன் இருப்பதோடு, மக்களையும், நாட்டையும் பாதுகாப்பதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை மடானி அரசாங்கம் உறுதிச் செய்வதாகவும் அன்வார் தமது முகநூல் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக நேற்று மதியம், 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய நிதி மன்றக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய, நிதியமைச்சருமான அன்வார், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக நிச்சயமற்ற சூழல் ஏற்பட்ட போதிலும், பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அதே வேளையில், 2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியான GDP-யின் வளர்ச்சி கணிப்புகளை விட அதிகமாக இருப்பதாகவும், வேலையின்மை விகிதமானது கடந்த 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு