Oct 11, 2026
Thisaigal NewsYouTube

கிள்ளானில் கேபள் திருட்டு, ஐவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிள்ளானில் கேபள் திருட்டு, ஐவர் கைது

கிள்ளான், மே.27-

கிள்ளான், பண்டமாரான், பூலாவ் இண்டா, தொழில்பேட்டைப் பகுதியில் நிகழ்ந்த மிகப் பெரிய கேபள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் போலீசார் ஐவரைக் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் அந்நிய நாட்டவர் என தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரம்லி காசா தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் 46 வயதுடைய நபரிடமிருந்து கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து இந்த கேபள் திருட்டை போலீசாரால் முறியடிக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது தொழிற்சாலைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக சில நபர்கள் சுற்றித் திரிகிறார்கள் என்று அந்த நபர் தந்த தகவலைத் தொடர்ந்து போலீசார் உஷாரானதாக ஏசிபி ரம்லி காசா கூறினார்.

25 க்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை