கோலாலம்பூர், ஆகஸ்ட்.16-
எம்பிஐ இண்டர்நேஷனல் குருப் சம்பந்தப்பட்ட முதலீட்டுத் திட்ட மோசடி தொடர்பில் ஒரு டத்தோ ஶ்ரீ அந்தஸ்தைக் கொண்ட மேலும் ஒரு பிரமுகர் உட்பட சில நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அண்மையில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் தொடங்கிய ஓப் நோதர்ன் ஸ்டார் எனும் சோதனை நடவடிக்கையின் மூலம் இவர்கள் பிடிபட்டுள்ளனர். டத்தோ ஶ்ரீ அந்தஸ்தைக் கொண்ட பிரமுகர் ஒருவர் இதில் கைது செய்யப்பட்டு இருப்பதை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சட்டவிரோத பண மாற்றம் தடுப்புப் பிரிவு விசாரணைக் குழுவின் தலைவர் முகமட் ஹஸ்புல்லா உறுதிப்படுத்தினார்.
எனினும் ஓப் நோதர்ன் ஸ்டார் எனும் சோதனை நடவடிக்கையின் முழு விபரங்களைப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் விரைவில் வெளியிடுவார் என்று அவர் குறிப்பிட்டார்.








