வரும் 2027 ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் புதிய பாடத் திட்டத்தின் மதிப்பீடுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் கல்வி அமைச்சு ஈடுபட்டு வருவதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளிகளில் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான அரசாங்க மதிப்பீட்டுத் தேர்வான யூ.பி.எஸ்.ஆர். அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேபோன்று இடைநிலைப்பள்ளிகளில் மூன்றாம் படி மாணவர்களுக்கான பிதி3 தேர்வு ரத்து செய்யப்பட்ட பின்னர் இந்த புதிய பாடத்திட்டத்தின் மீது அனைத்து தரப்பினரும் தீவிர கவனம் செலுத்துவர் என்று ஃபட்லினா சிடெக் நம்பிக்கைத் தெரிவித்தார்.








