Oct 17, 2026
Thisaigal NewsYouTube

காரில் மோதி இளைஞர் உரிழப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காரில் மோதி இளைஞர் உரிழப்பு

மலாக்கா, நவ. 11-


இளைஞர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள், வேககட்டுப்பாட்டை இழந்து காருடன் மோதி, விபத்துக்குள்ளானதில், கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மலாக்கா, கிளேபாங் உத்தாமாவில் நிகழ்ந்தது. டத்தாரான் கிளேபாங்கில், இழுவை வண்டி உதவியாளரான அந்த இளைஞர் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த இளைஞர் ரிம்போங்கானை நோக்கி மோட்டார் சைக்கிளிலில்சென்று கொண்டிருந்த போது கிளேபாங் சாலை வட்டத்தில் பெண் ஒருவர் செலுத்திய பெரொடுவா பெஸா ரக காரில் மோதியதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாதிட் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →