Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஆடவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், சந்தேகப் பேர்வழி கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆடவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், சந்தேகப் பேர்வழி கைது

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 21-

கடந்த வாரம் பெட்டாலிங் ஜெயா அருகில் பெர்சியாரன் மெரந்தி, பன்டார் ஸ்ரீ தமன்சாரா - வில் பகுதி நேர வடிவைமைப்பாளர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகப்பேர்வழி ஒருவரை போலீசார் நேற்று வெள்ளிக்கிழமை வளைத்துப்பிடித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆசாமி கோலாலம்பூரில் பிடிப்பட்டதை பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி ஷாருல்நிஜாம் ஜாபர் – உறுதிபடுத்தினார்.

கடந்த வாரம் பன்டார் ஸ்ரீ தமன்சாரா - வில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் 36 வயது முஹம்மது ஷர்காவி அபு பக்கர் என்ற நபர் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இக்கொலை சம்பவம் தொடர்பில் போலீசார் நடத்திய புலன் விசாரணையில் நேற்று இரவு அந்த சந்தேகப் பேர்வழி பிடிபட்டதாக ஏசிபி ஷாருல்நிஜாம் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டவரின் வீட்டில் நிகழ்ந்த கொள்ளை முயற்சி, பின்னர் கொலையில் முடிந்து இருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாக ஏசிபி ஷாருல்நிஜாம் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →