கோத்தா கினபாலு, செப்டம்பர்.18-
பள்ளியின் தங்கும் விடுதி குறித்து மாணவி ஸாரா கைரினா மகாதீர் அதிருப்திகளை வெளிப்படுத்திய போதும், அவரது தாயார் ஏன் அமைதி காத்தார் என செகோலா மெனெங்கா அகாமா துன் டத்து முஸ்தபா பள்ளியின் தலைமை வார்டன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று வியாழக்கிழமை மாணவி ஸாராவின் மரணம் தொடர்பான ஒன்பதாம் நாள் விசாரணை நடவடிக்கைகளின் போது, எட்டாவது சாட்சியாக மரண விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியமளித்த தலைமை வார்டன் அஸாரி அப்துல் சகாப், ஸாராவின் தாயார் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
‘காக் எம்’ என்பவர் பற்றிய பிரச்சினை கடந்த மே மாதம் தான் பள்ளியின் விசாரணையின் அடிப்படையில் தொடங்கியது என்றும், ஆனால் ஸாராவின் தாயார் ஏன் அது குறித்து எந்த ஒரு புகாரையும் பள்ளியில் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.








