Sep 26, 2026
Thisaigal NewsYouTube
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 30 வீடுகள் சாம்பல்
தற்போதைய செய்திகள்

அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 30 வீடுகள் சாம்பல்

Share:

அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் குறைந்தது 30 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இந்தத் துயரச் சம்பவம் சண்டாக்கான், கம்போங் கரமுண்டிங், ஜாலான் பொகாரா பகுதியில் இன்று நிகழ்ந்தது.

அதிகாலை 3:34 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, 21 பணியாளர்கள் அடங்கிய குழுவினர் 1.4 ஹெக்டேர் பரப்பளவில் பரவிய தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட இப்பகுதியில், தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் சுமார் 100 வீடுகள் தீக்கிரையாவதிலிருந்து காப்பாற்றப்பட்டன.

இந்த விபத்தில் எவருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை என்று சண்டாக்கான் தீயணைப்பு நிலையத் தலைவர் ஜிம்மி லாகுங் உறுதிப்படுத்தினார். காலை 7 மணியளவில் மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News