மெலாகா,ஜூலை 27-
பக்கத்து வீட்டு பெண்மணியின் சமையல் வாசனை, தனது வீட்டிற்குள் நுழைந்து விட்டதாக கூறி, அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, தகராறு செய்து, அப்பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்ணின் 48 வயது சகோதரனிடமிருந்து போலீசார் புகார் பெற்றதாக Melaka Tengah மாவட்ட போலீஸ் தலைவர் ACP Chiristopher Patit தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து Melaka, Taman Bertam Jaya- வை சேர்ந்த 63 வயது நபரை இன்று காலை 11.15 மணியளவில் போலீசார் கைது செய்ததாக ACP Chiristopher குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தில் தனது சகோதரியை அந்த நபர் தாக்கிய போது, அதனை தடுக்க சென்ற தம்மையும் அந்த நபர் தாக்கியதாக புகார்தாரர் தெரிவித்துள்ளார்.
பிடிபட்ட நபர், வாக்குமூலம் பதிவுக்கு பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ACP Chiristopher தெரிவித்தார்.








