ஜார்ஜ்டவுன், நவம்பர்.14-
பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த 3,954 அரசு ஊழியர்கள், சிறப்பு நிதி உதவியாக தங்கள் சம்பளத்தில் 0.75 விழுக்காட்டுத் தொகை அல்லது குறைந்தபட்சம் ஆயிரம் ரிங்கிட்டைப் பெறுவார்கள் என்று மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.
இந்த சிறப்பு நிதி உதவித்தொகை அடுத்த மாதச் சம்பளத்தில் சேர்க்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று பினாங்கு சட்டமன்றக் கூட்டத்தில் மாநிலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.








