Jul 21, 2026
Thisaigal NewsYouTube
அனைத்துலக ஒழுங்குமுறை மாநாடு 2026: கோலாலம்பூரில் தொடங்கியது
தற்போதைய செய்திகள்

அனைத்துலக ஒழுங்குமுறை மாநாடு 2026: கோலாலம்பூரில் தொடங்கியது

Share:

தொழில்நுட்ப வளர்ச்சிகள் மற்றும் சிக்கலான இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் அனைத்துலக ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஐ.ஆர்.சி எனபடும் அனைத்துலக விதிமுறைகள் மீதான மாநாடு 2026 தொடங்கப்பட்டுள்ளதாகத் தொடர்புத்துறை அமைச்சர் பஹமி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

ஒற்றை மொத்த விற்பனை வலைப்பின்னலில் இருந்து இரட்டை வலைப்பின்னல் 5ஜி மாதிரிக்கு மலேசியா மாறியுள்ளதில் அனைத்துலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள ஈர்ப்பே இந்த இரு நாள் மாநாடு நடைபெற முக்கியக் காரணமாகும் என்று பஹமி குறிப்பிட்டார். மேலும், இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளன.

இணையப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதைப் போல, எதிர்கால தொழில்நுட்பங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டங்களை அரசாங்கம் உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, பயனர்கள் முறையற்ற படங்களை உருவாக்க கிராக் ஏஐ தவறாகப் பயன்படுத்தப்பட்டதை அடுத்து, எம்.சி.எம்.சி உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News