கோலாலம்பூர், ஆகஸ்ட்.14-
கடை ஒன்றில் தேசியக் கொடி தலைகீழாகக் கட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பினாங்கு கெப்பளா பாத்தாஸில் உள்ள அந்த கடையின் முன் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் திரள வேண்டாம் என்று போலீசார் எச்சரித்து இருந்த போதிலும் , இன்று அப்பகுதியில் பெரும் கூட்டத்துடன் திரண்ட அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலேவிற்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பினாங்கு மாநில ஜசெக தலைவர் ஸ்டீவன் சிம் வலியுறுத்தியுள்ளார்.
போலீசாரின் உத்தரவையும் மீறி கெப்பாளா பாத்தாஸில் பெருங்கூட்டத்துடன் அக்மால் திரண்டு, இடையூறு ஏற்படுத்தியது தொடர்பில் அவர் மீது சட்டம் பாய வேண்டும் என்று மனித வள அமைச்சரான ஸ்டீவன் சிம் வலியுறுத்தினார்.
பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தக்கூடிய இது போன்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பங்கு கொள்ள வேண்டாம் என்று போலீஸ் துறை நேற்று எச்சரித்து இருந்தையும் ஸ்டீவன் சிம் சுட்டிக் காட்டினார்.








