மனரீதியாக பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவரின் சடலத்தை போலீசார் கால்வாய் ஒன்றிலிருந்து மீட்டனர். கோம்பாக், ஜாலான் லிங்காரான் தெங்ஙா 2 சாலையின் ஓரத்தில் கால்வாய் ஒன்றில் அந்த ஆடவரின் சடலம் நேற்று மாலை 4.31 மணியளவில் மீட்கப்பட்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் நூர் அரிஃபின் முஹமாட் நாசிர் தெரிவித்தார்.
63 வயதுடைய அந்த நபர், மனோரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் அந்த சாலையின் ஓரத்தில் நடந்த வந்து கொண்டிருந்த போது தவறி கால்வாயில் விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக நூர் அரிப்பின் குறிப்பிட்டார்.







