கோலாலம்பூர், நவம்பர்.18-
மலேசிய வர்த்தகப் பேராளர்கள் குழுவிற்குத் தலைமையேற்று இன்று மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பயண நேரத்தை மிச்சம் செய்வதற்காக மலேசிய ஏர்லைன்ஸின் தனிப்பட்ட வாடகை விமானம் மூலம் செல்வதாக பிரதமர் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று தொடங்கி 24-ஆம் தேதி வரையில், எத்தியோபியா, கென்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்கு பேராளர்கள் மற்றும் வர்த்தகப் பரிவாரங்களுடன் செல்வதால், நேரத்தையும், செலவுகளையும் மிச்சப்படுத்தும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமரின் பத்திரிக்கைச் செயலாளர் துங்கு நாஷ்ருல் அபைடா தெரிவித்துள்ளார்.
அரசாங்க விமானத்தைப் பயன்படுத்தினால் 13 மணி நேரங்கள் ஆகும் என்பதற்காகவும், அதன் கொள்ளவும் குறைவு என்பதற்காகவும் இந்த மலேசிய ஏர்கைன்ஸின் தனிப்பட்ட வாடகை விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.








