பினாங்கு,ஜூலை 21-
PARALLEL PATHWAY வெளிநாட்டு மருத்துவ நிபுணத்துவ பட்டப்படிப்பின் தரம் குறித்து கலக்கமுறத் தேவையில்லை.
உலகத் தரம் வாய்ந்த கல்லூரிகளில் இருந்து நிபுணத்துவ சான்றிதழைப் பெற நாட்டிலுள்ள மருத்துவர்கள் பல்வேறு மதிப்பீட்டு முறைகளையும், தரநிலைகளையும் கடந்தாக வேண்டியிருப்பதை செனட்டர் DR RA LINGESHWARAN சுட்டிக்காட்டினார்.
அதோடு நாட்டில் பதிவுப் பெற்ற மருத்துவ நிபுணர்களாக சேவையாற்றுவதற்கு முன், அரசுப் பதிவில் நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கு இணங்க அவர்களின் தரத்தை சுகாதார அமைச்சு ஆறு மாதங்களுக்கு ஆராயும்.
மலேசிய மருத்துவர்கள் வெளிநாட்டு மருத்துவ நிபுணத்துவக் கல்வித் திட்டங்களில் இணைந்து பட்டப்படிப்பை தொடரும் வழக்கம் பல்லாண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
அந்தப் பட்டப்படிப்பு இப்போது PARALLEL PATHWAY என பெயர் மாற்றம் கண்டுள்ளது.
முன்னாள் சுகாதார தலைமை இயக்குநர் Dr Ismail Merican உள்ளிட்ட நாட்டின் முக்கிய மருத்துவ நிபுணர்கள் அத்தகைய வெளிநாட்டு பட்டம் பெற்றவர்கள் ஆவர் என்பதை பினாங்கு SUNGAI BAKAP மருத்துவமனையின் முன்னாள் இயக்குநருமான DR RA LINGESHWARAN மேற்கோள் காட்டினார்.
அந்த நிபுணத்துவ பட்டப்படிப்பின் தரம் குறித்து இப்போது கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லை என ARAU நாடாளுமன்ற உறுப்பினர் Shahidan Kassim-மின் கூற்றுக்கு, அவர் மேற்கண்டவாரு கருத்துரைத்தார்.








