ஜன.9
பிகேஅர் கட்சியின் மகளிர் பிரிவு உதவித் தலைவர் சங்கீதா ஜெயக்குமார், கிள்ளான் துறைமுக இயக்குநர் வாரியத்தில் ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பும், குறைகூறல்களும் அதிகரித்து வருகின்றன.
ஜிஎல்சி எனப்படும் அரசாங்க சார்பு நிறுவனங்களில் அரசியல் நியமனங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று நடப்பு அரசாங்கம் உறுதி பூண்டுள்ள வேளையில் பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித்தலைரும், குடிநீர், இயற்கை வளத்துறையின் முன்னாள் அமைச்சருமான சேவியர் ஜெயக்குமாரின் ஒரே புதல்வியான சங்கீதா ஜெயக்குமார், கிள்ளான் துறை முக வாரியத்தின் ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பது எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நாட்டின் பிரதமராக பொறுப்பு வகித்த 2022 ஆம் ஆண்டில் அவர் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம், எம்.பி.க்களின் ஆதரவை பெறுவதற்காக அவர்களை அரசாங்க சார்பு நிறுவனங்களின் தலைவராகவும், இயக்குநராகவும் நியமித்து வருகிறது என்று சங்கீதா ஜெயக்குமார் கடுமையாக குறைகூறியிருந்தார்.
அரசியல் நியமனங்கள் கூடாது என்று திடமாக வாதிட்டு வந்த சங்கீதா ஜெயக்குமார், கிள்ளான் துறைமுகத்தின் வாரியத்தில் இயக்குநர் பதவியை மட்டும் எவ்வாறு ஏற்றக்கொண்டார்,?
GLC பதவி என்பது அரசியல் நியமனத்தின் வாயிலாக கிடைத்தது என்பது அவருக்கு தெரியாதா? என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.








