Oct 18, 2026
Thisaigal NewsYouTube

பாலியல் பலாத்காரம், மூன்று சிறார்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாலியல் பலாத்காரம், மூன்று சிறார்கள் கைது

கோத்தா பாரு,செப்டம்பர் 30-

சபா, தவாவ் -வில் உள்ள ஒரு பழந்தோட்டத்தில் கடந்த வியாழக்கிழமை 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் 12 க்கும் 14 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அந்த சிறுமியின் தாயார் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த மூன்று சிறார்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தவாவ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் துணைத் தலைவர் சாம்பின் பியூஹ் தெரிவித்தார்.

புகார் அளிக்கப்பட்ட அடுத்த 45 நிமிடத்தில் அந்த மூன்று சிறார்களும் விசாரணைக்கு ஏதுவாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →