லாஹாட் டத்து, ஜூலை.16-
வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதாளத்தில் விழுந்ததில் மாது ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலையில் சபா, லாஹாட் டாத்து, லாடாங் பெர்மாய் என்ற தோட்டத்தில் நிகழ்ந்தது.
விபத்துக்குள்ளான டொயோட்டா ஹைலக்ஸ் வாகனத்தில் 7 ஆண்கள், 7 பெண்கள், ஒரு சிறுவன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அதிகாலை 5.53 மணிக்குத் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக லாஹாட் டாத்து தீயணைப்பு நிலையத்தின் தலைவர் சும்சோவா ரஷிட் தெரிவித்தார்.
தீயணைப்பு, மீட்புப்படையின் உதவியுடன் அனைவரும் அந்த பள்ளத்தாக்கிலிருந்து மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








