Apr 7, 2026
Thisaigal NewsYouTube
ஹோட்டலில் மயங்கி விழுந்த 27 வயது இளம்பெண் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

ஹோட்டலில் மயங்கி விழுந்த 27 வயது இளம்பெண் உயிரிழப்பு

Share:

பினாங்கு, தஞ்சோங் தோக்கோங் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட 27 வயது உள்ளூர் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தீமூர் லாட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சூப்பிரிண்டெண்டென் லீ ஸ்வீ செங் இது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் மருத்துவமனையிலிருந்து போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தார். கெடா, லங்காவியைச் சேர்ந்த அந்தப் பெண், தனது காதலருடன் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி பினாங்கிற்குச் சுற்றுலா வந்து அந்த ஹோட்டலில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று காலை 9.30 மணியளவில், குளித்து முடித்துவிட்டு படுக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அந்தப் பெண் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரது காதலர் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை பினாங்கு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் காலை 11.46 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

முதற்கட்ட சோதனையில் அந்தப் பெண்ணின் உடலில் காயங்களோ அல்லது குற்றச் செயல்களுக்கான அறிகுறிகளோ இல்லை எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழப்பிற்கான துல்லியமான காரணத்தை அறிய இன்று சவப்பரிசோதனை நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

நாட்டில் நிலவும் சர்ச்சைகளின் எதிரொலி/ தேசிய ஒற்றுமை மற்றும் சமரச ஆணையத்தை மீண்டும் அமைக்கும் முயற்சிகள் தீவிரம்

நாட்டில் நிலவும் சர்ச்சைகளின் எதிரொலி/ தேசிய ஒற்றுமை மற்றும் சமரச ஆணையத்தை மீண்டும் அமைக்கும் முயற்சிகள் தீவிரம்

குளுவாங்கில் புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்டன

குளுவாங்கில் புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்டன

மோசடிக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் - ஆர் சஞ்சீவன் வலியுறுத்து

மோசடிக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் - ஆர் சஞ்சீவன் வலியுறுத்து

ஜோகூரில் பெர்ஹிலிடிான் நடத்திய அதிரடிச் சோதனை: 36.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வனவிலக்கு உடல் பாகங்கள் பறிமுதல்

ஜோகூரில் பெர்ஹிலிடிான் நடத்திய அதிரடிச் சோதனை: 36.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வனவிலக்கு உடல் பாகங்கள் பறிமுதல்

சொத்து விவரங்களை மறைத்த வழக்கு: டாயிம் மகள் அசனிடா விசாரணை கோரினார்

சொத்து விவரங்களை மறைத்த வழக்கு: டாயிம் மகள் அசனிடா விசாரணை கோரினார்

பவுலிங் மையத்தில் பபூட்டிய அறையில் ஊழியர் சடலமாகக் காணப்பட்டார்

பவுலிங் மையத்தில் பபூட்டிய அறையில் ஊழியர் சடலமாகக் காணப்பட்டார்