தேசிய தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேசிய தின அணிவகுப்பில் துணிவிற்கு முன்னுதாரணமாக விளங்கும் தீயணைப்பு, மீட்புப்படையை சேர்ந்த பிரான்கி என்ற நாயும் பங்கேற்க விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாய்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட அணிவகுப்பில் பிரான்கி முன்னிலைப்படுத்தைப்படும் என்று அவ்விலாகா தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலு சிலாங்கூர் பத்தாங் காலியில் நிகழ்ந்த நிலச்சரிவு பேரிடரில் உயிருடன் புதையுண்ட 31 பேரின் உடல்களை மீட்பதில் தீயணைப்பு, மீட்புப்படையினருக்கு பெரும் பங்காற்றிய கே9 பிரிவின் மோப்ப நாயான பிரான்கி -யை கௌரவிக்கும் வகையில் இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அப்படையின் முதிர்நிலை அதிகாரி எச்.பிரம்நாத் தெரிவித்துள்ளார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


