கோவிட்-19 பெருந்தொற்றை சமாளிக்க அரசாங்கம் வெண்டிலேட்டர் எனப்படும் சுவாசக் கருவிகளைப் பெறும்போது தாம் சுகாதார அமைச்சராக இல்லை என கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
எனவே. இவ்விவகாரம் குறித்து விமர்சிபவர்கள் சரியானத் தகவல்களைத் திரட்டிய பிறகே தங்களின் விமர்சனத்தை முன்வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அந்த வெண்டிலேட்டர்கள் பெறப்பட்டது 2020ஆம் ஆண்டு. ஆனால், தாம் சுகாதார அமைச்சராகப் பதவி ஏற்றது 2021 ஆம் ஆண்டு என அவர் விளக்கமளித்துள்ளார்.
தகவல்கள் சரியாக இல்லாட்ய நிலையில், சம்பந்தமே இல்லாமல் தம்மை இவ்விவகாரம் குறித்து விமர்சிப்பது முறையாகாது என்றார்.
2020 ஆம் ஆண்டு சீன நாட்டு நிறுவனத்திடமிருந்து பழுதடைந்த சுவாசக் கருவிகளை சுகாதார அமைச்சு வாங்கியது தொடர்பில் பொதுக் கணக்காய்வு குழு வெளியிட்ட அறிக்கை குறித்து கைரி ஜமாலுதீன் அவ்வாறு கூறினார்.








