Oct 17, 2026
Thisaigal NewsYouTube

வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் ஸைனால் காலமானார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் ஸைனால் காலமானார்

ஷா ஆலாம், நவ.7-


நாட்டின் முன்னணி வரலாற்றுப் பேராசிரியரும் தேசிய வரலாற்று நிபுணருமான பேராசியர் டாக்டர் ஸைனால் கிலிங் காலமானார். அவருக்கு வயது 80.

டாக்டர் ஸைனால் கிலிங் இன்று அதிகாலையில் ஷா ஆலாம் மருத்துவமனையில் தமது இறுதி மூச்சை விட்டார். உலக வரலாற்று கலைக்களஞ்சியம், மலாய் கலை, கலாச்சார, வரலாறு, நாட்டின் முன்னணி மொழிக்காப்பகமான டேவான் பஹாசா டான் புஸ்தாகா உட்பட வரலாறு சார்ந்த பல்வேறு அமைப்புகளிலும் டாக்டர் ஸைனால் கிலிங் முக்கியப் பொறுப்பு வகித்து வந்தார்.

இதற்கு மேலாக மலேசிய மக்களின் வறிய நிலையை துடைத்தொழிப்பதற்கு புறநகர் மேம்பாட்டு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்புக்குழுவிலும் டாக்டர் ஸைனால் கிலிங் முக்கியப் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →