கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ செரி தியோங் கிங் சிங் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் சம்பவத்தில் பாதுகாப்பு அம்சம் ஒரு விவகாரமாக எழவில்லை . எனவே இதனை பெரிதுப்படுத்த வேண்டியதில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா அமைச்சர் என்ற முறையில் தியோங் கிங் சிங் விஐபிக்கான சிறப்பு அனுமதி அட்டையைப் பெற்ற பின்னரே அப்பகுதியில் நுழைந்துள்ளார். விமானத்தில் பயணிப்பதற்காக அமைச்சர் அப்பகுதிக்கு செல்லவில்லை. மாறாக, நடப்பு நிலையை கண்காணிப்பதற்காகவே அப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கே பாதுகாப்பு அம்சம் கேள்விக்குறியாகிவிடவில்லை என்று அந்தோணி லோக் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


