கோலா பிலா, பிப்ரவரி.21-
கோலா பிலா, Johol (ஜோஹோல்), Inas, Kampung Segineh-வில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தனது தாயின் கழுத்தில் 'டின்னை திறக்கும் சாதனத்தைக் கொண்டு குத்தியதாகக் கூறப்படும் பெண், விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோலா பிலா மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி முஸ்தஃபா ஹுசேன் இது குறித்துக் கூறுகையில், தம்பின் மாஜிஸ்திரேட் Mohamad Redza Azhar Rezali முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்தப் பெண்ணுக்கு பிப்ரவரி 21 முதல் 27 ஆம் தேதி வரை தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், சந்தேக நபரான அந்தப் பெண்ணுக்கு மனநலம் சார்ந்த பாதிப்புகள் மற்றும் இதர உடல்நலக் கோளாறுகள் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக, அவர் தற்போது துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற வேண்டிய தடுப்புக் காவல் நடைமுறைகள், அந்த மருத்துவமனையிலேயே மேற்கொள்ளப்பட்டதாக ஏசிபி முஸ்தஃபா குறிப்பிட்டார்.








