Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஐந்து வாகனங்கள் மோதல் :மூன்று வாகனங்கள் தீப்பற்றின
தற்போதைய செய்திகள்

ஐந்து வாகனங்கள் மோதல் :மூன்று வாகனங்கள் தீப்பற்றின

Share:

ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று வாகனங்கள் தீப்பற்றி எரிந்து கடுமையான சேதத்திற்குள்ளாயின.

ஒரு டிரெய்லர் லாரி, ஒரு வேன் மற்றும் மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று தீயணைப்புத் துறை தெரிவித்தது. பினாங்க, ஜெலுத்தோங், ஜாலான் மஸ்ஜித் நெகிரி, உதினி சுரங்கப்பாதை பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் சிக்கிய டிரெய்லர் லாரி, வேன் மற்றும் புரோட்டான் 70 கார் ஆகியவை தீயில் பெருமளவில் எரிந்து சாம்பலாகின. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்க போக்குவரத்து போலீசார் கடமையாற்றினர்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு