May 21, 2026
Thisaigal NewsYouTube
இரண்டாம் படிவ மாணவன் பலி
தற்போதைய செய்திகள்

இரண்டாம் படிவ மாணவன் பலி

Share:

மலாக்கா, ஜாசினில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஜாசின் டத்தோ பெண்டாரா இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த இரண்டாம் படிவ மாணவன் ஒருவன் உயிரிழந்தான். இச்சம்பவம் இன்று காலை 7.22 மணியளவில் மலாக்கா, ஜாலான் அயேர் பெருக் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் தாமான் ஶ்ரீ கெமென்டோர் என்ற இடத்தை சேர்ந்த 14 வயது முஹம்மது சியாமியாசிராஃப் முகமது ஜைனி என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.

மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நான்காம் படிவ மாணவன் கடும் காயங்களுடன் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related News