கோலாலம்பூர், செப்டம்பர்.23-
நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள சுற்றுலாத் தளமான போர்டிக்சனின் பெயரை மாற்றுவது குறித்த பரிந்துரைகளுக்கு சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் தியோங் கிங் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவ்வாறு புதிய பெயரை மாற்றம் செய்யும் போது, அது வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர்ட்டிக்சனின் பெயரை பந்தாய் டெர்மாகா என மாற்ற வேண்டும் என்று, சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அது போன்ற முயற்சிகள் போர்டிக்சனின் சுற்றுலாவைப் பெரிதளவில் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுடின் ஹாருனும், என்ஜியோக்களின் இந்த பெயர் மாற்றக் கோரிக்கையை மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








