கோலாலம்பூர், டிசம்பர்.11-
சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் 12 குற்றச்சாட்டுகளிலிருந்து டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோரை விடுதலை செய்து இருக்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அப்பீல் நீதிமன்றத்தில் செய்து கொள்ளப்பட்ட மேல்முறையீட்டை பிராசிகியூஷன் தரப்பு மீட்டுக் கொண்டது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செய்து கொள்ளப்பட்ட மேல்முறையீட்டு வழக்கைத் தொடர்வதற்கு தாங்கள் நோக்கம் கொண்டு இருக்கவில்லை என்று கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் சார்வு செய்யயப்பட்ட மனுவில் பிராசிகீயூஷன் தரப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கின் மனைவியான ரோஸ்மா, 7 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட சட்டவிரோதப் பணமாற்றம் தொடர்பில் 7 குற்றச்சாட்டுகளையும், தனது வருமான விவரத்தை வருமான வரி வாரியத்திடம் தெரிவிக்கத் தவறியது தொடர்பில் 5 குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கியிருந்தார்.








