கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் அறிவித்த இந்திய சமூகத்தை வளப்படுத்தும் 4 திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
அந்த நான்கு முதன்மை திட்டங்களும் வெளிப்படையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் வெகு விரைவில் செயல்படுத்தப்படும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
நேர்மை நன்னெறிப் பிரிவு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உட்பட சில அரசாங்க ஏஜென்சிகளுடனான ஒத்துழைப்பு மற்றும் தீவிர கண்காணிப்புடன் இந்த நான்கு திட்டங்களும் அமல்படுத்தப்படும் என்று அவர் விளக்கினார்.
தேசிய மேம்பாட்டு நீரோடையில் இந்திய சமுதாயம் ஓரங்கட்டப்படாமல், அவர்களும் தேசிய பலாபலன்களை அனுபவிப்பதை உறுதிச் செய்வதற்கு இந்திய சமுதாயத்திற்கான இந்த 4 திட்டங்களும் அரசாங்கத்தின் கடப்பாட்டை நிரூபிக்கிறது என்று டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.








