Aug 5, 2026
Thisaigal NewsYouTube
மெர்டேக்கா சுழற்கிண்ண ஃபுட்சால் போட்டி
தற்போதைய செய்திகள்

மெர்டேக்கா சுழற்கிண்ண ஃபுட்சால் போட்டி

Share:

பெர்துபுஹான் கெபங்கித்தான் திகா தாங்ஙான் சிலாங்கூர் ஏற்பாட்டில் கடந்த அக்டோபர் முதல் தேதி ஞாயிற்றுக் கிழமை ஶ்ரீ கோம்பாக் கே.எஸ்.எல் ஃபுட்சால் மையத்தில் மெர்டேக்கா சுழற்கிண்ண ஃபுட்சால் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது.

சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, ப்த்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன், ஜேகேபி சோன் 7 செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர் தேவேந்திரன் செல்வராஜு , லைஃப் சேவர் எம்பூலன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நேசன் பாலகிருஷ்ணன் , ஓயில் ரெக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மாறன் ஆகியோரின் இணை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் ஃபுட்சால் போட்டியில் 32 குழுக்கள் கலந்து கொண்டன.

காலை 9.00 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டியை பத்து எம்.பி. பிரபாகரன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.

இது போன்ற போட்டிகளில் நம் இளைஞர்கள் ஈடுபடுவதன் வாயிலாக அவர்களிடையே 'இலைமறை காய் போல' மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்த இயலும். இதனால், நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க முடியும் என்பதுடன் அவர்கள் தடம் மாறி செல்லவும் வாய்ப்புகள் இருக்காது எனக் குறிப்பிட்ட பிரபாகரன், பெர்துபுஹான் கெபங்கித்தான் திகா தாங்ஙான் சிலாங்கூர் இன் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்காக 3,000 வெள்ளி நன்கொடையை வழங்குவதாக அறிவித்தார்.

இப் போட்டியில் கலந்து கொண்ட GERS FT அணி, முதல் இடத்தை பிடித்து, சாம்பியனாக வாகை ​சூடியதைத் தொடர்ந்து 5,000 வெள்ளி ரொக்க பரிசுத் தொகை, பதக்கங்கள் மற்றும் சுழற்கிண்ணம் ஆகிவற்றை வென்றது.

இரண்டாம் இடத்தில் ஹ்ம் பிசி ஃப்சி அணி வெற்றி பெற்று 2,500 வெள்ளி பரிசுத் தொகையோடு பதக்கங்களையும் தட்டிச் சென்றது.

மூன்றாம் இடத்தில் ஐஃப்சி தக்சிமெர் அணி 1,000 வெள்ளியையும் நான்காம் இடத்தைப் பிடித்த ADZ FC அணி 500 வெள்ளியையும் வென்றது. வெற்றியாளர்களுக்கு பெர்துபுஹான் கெபங்கித்தான் திகா தாங்ஙான் சிலாங்கூர் அமைப்பின் தலைவர் மாறன் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

மேலும், தங்களின் இந்த முயற்சிக்கு ஆதரவளி​த்து, நன்கொடை வழங்கிய Batu எம்.பி. பிரபாகரனுக்கு பெர்துபுஹான் கெபங்கித்தான் திகா தாங்ஙான் சிலாங்கூர்இன் தலைவர் மாறன் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News

மெர்டேக்கா சுழற்கிண்ண ஃபுட்சால் போட்டி | Thisaigal News