சிப்பாங், ஜன - 8,
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையில் அமைந்திருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் வகையில் தேசியக் கூட்டணிக்குப் போதுமான சத்தியப் பிரமாணம் இருப்பதாக கெடா மந்திரி பெசார் கூறி இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் தாம் எந்தவித பதிலையும் கூறப் போவதிலை எனப் பிரதமர் கூறி உள்ளார்.
அதிகமான வேலை தமக்கு இருப்பதாகவும் சனுசியின் கருத்துக்கு தாம் பதில் கூறப்போவதில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை, மாமன்னரைச் சந்திக்க தங்களி சத்தியப் பிரமாணக் கடிதத்துடன் 118 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக சொல்லப்பட்டதை, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மறுத்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அந்தப் போலியானத் தகவலை தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் வெளியிட்டதாகவும் கூறப்பட்டு வந்தது.
இதற்கு முன், "துபாய் நகர்வு" என்று அழைக்கப்படும் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியால் பக்காத்தான் ஹராப்பான் தலைவரான அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை ஒரு போதும் பாதிக்காது என்று கூறி இருந்தார்.








