Aug 7, 2026
Thisaigal NewsYouTube
13 மணி நேரத்திற்கு பிறகு சுங்கை பூலோ தொழிற்சாலையின் தீ அணைக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

13 மணி நேரத்திற்கு பிறகு சுங்கை பூலோ தொழிற்சாலையின் தீ அணைக்கப்பட்டது

Share:

சிலாங்கூர், சுங்கை பூலோ, கம்போங் பாரு சுங்கை பூலோ அருகில் தளவாடப் பொருட்கள் தயாரிக்கும் 6 தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு வீரர்கள் சுமார் 13 மணி நேரம் வரை கடுமையாக போராடினர்.

நேற்று, ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 4:00 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ, இன்று காலை 6:05 மணி அளவில்

முழுமையாக அணைக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரி வான் எம்டி ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

நீரின் அழுத்தம் குறைவாக இருந்தது மற்றும் தொடர்ந்து பயங்கர வெடிப்பு சம்பவங்கள் போன்றவற்றினால் தீயை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் வீரர்கள் கடுமையாக போராட வேண்டியிருந்ததாக எம்டி ரசாலி குறிப்பிட்டார்.

சுங்கை பூலோ, செலாயாங், டாமன்சாரா, ரவாங், பூச்சோங் செக்‌ஷன் 7, கோலாலம்ர் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் ஆகிய நிலையங்களை சேர்ந்த 12 தீயணைப்பு வண்டிகள் மூலம் 50 க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது