Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பாடாங் செராய், செலுவாங் ஶ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திற்கு மாற்று நிலம் பரிந்துரை
தற்போதைய செய்திகள்

பாடாங் செராய், செலுவாங் ஶ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திற்கு மாற்று நிலம் பரிந்துரை

Share:

ஆலயத்தை அகற்ற கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள கெடா, பாடாங் செராய், சுங்கை செலுவாங் ஶ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திற்கு மாற்று நிலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூலிம் சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான வோங் சியா ஜென் தெரிவித்தார்.

முன்னதாக, சைம் டார்பிக்கு சொந்தமான நிலப்பகுதிகள், கே.தி.பி.சி எனப்படும் Kulim Technology Park Coperation நிறுவனத்திற்கு விற்கப்பட்டு விட்டதாக கூறி, தொழில் பேட்டைக்கு வழிவிடும் வகையில் அந்த ஆலயத்தை அவ்விடத்திலிருந்து அகற்றக்கோரி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்த இரண்டு முறை நோட்டீஸ் பெற்று விட்டதாகவும் ஆலயத் தலைவர் கிஷோர்குமார் கூறியிருந்தார்.

ஆலயம் உடனடியாக அகற்றப்படவில்லை என்றால் உடைப்படும் அபாயம் இருப்பதாக அந்த நிறுவனம் எச்சரித்துள்ள வேளையில் அந்த பழமை வாய்ந்த ஆலயம் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் கிஷோர்குமார் வலியுறுத்தியிருந்தார்.

குறிப்பாக ஆலயத்தின் அருகாமையிலேயே மாற்று நிலம் வழங்கப்படுமானால் ஆலயத்தை இடம் மாற்றம் செய்வதில் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று அவர் விவரித்தார்.

நேற்று கூலிம் மாவட்ட இலாகாவில் சுங்கை செலுவாங் தோட்ட ஶ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் நிலம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுகையில் வோங் சியா ஜென் இதை குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து